பிரான்ஸ்சின் முன்னாள் அதிபருக்கு சிறை!


 பிரான்ஸ்சின் முன்னாள் அதிபர் நிக்கோலா சாகோஸிக்கு இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை அடங்கலாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாம் தொடர்புபட்ட வழக்கொன்றின் தகவல்களை சட்டவிரோதமாக மூத்த நீதிபதி ஒருவருடம் இருந்து பெறுவதற்கு பதிலாக பெறுமதியான தொழில் வாய்ப்பொன்றை வழங்குவதற்கு முன்வந்த வழக்கில் 66 வயதான சாகோஸி குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

இதன்மூலம் நவீன பிரான்ஸ்சில் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட இரண்டாவது ஜனாதிபதியாக நிக்கோலா சாகோஸி பதிவாகியுள்ளார்.

இதேவேளை சாகோஸிக்கு அவர் தொடர்புபட்ட வழக்கின் தகவல்களை வழங்கிய நீதிபதி மற்றும் சாகோஸியின் சட்டத்தரணிக்கும் சாகோஸிக்கு விதிக்கப்பட்டதை போன்ற தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மூவரும் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறைச்செல்வதற்கு பதிலாக ஒராண்டு கால சிறைத்தண்டனையை வீட்டிலேயே இருந்தவாறு அனுபவிக்கலாம் என பாரிஸ் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

சாகோஸி, தாம் தவறு செய்கின்றேன் என்பதை அறிந்துகொண்டே சாகோஸி, குற்றமிழைத்துள்ளதாகவும் சாகோஸி மற்றும் அவரது சட்டத்தரணியின் செயற்பாடு, நாட்டின் நீதிக் கட்டமைப்பு தொடர்பில் தவறான விம்பத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே பாரிஸ் மேயராக இருந்த போது சட்டவிரோதமாக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியான ஜாக் சிஹாக் என்ற முன்னாள் ஜனாதிபதிக்கும் இடைநிறுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.