இந்தியா ஒத்துழைப்பு வழங்காமை பாதிப்பாகாது!


 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஒத்துழைப்பு வழங்காமை பாதிப்பாகாது.

எனினும், அவர்கள் எங்களுக்கு  துணை நிற்பார்கள் என நான் நினைக்கிறேன் என  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியின் செயலாளரும் இராஜங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொழிலாளர் சங்கத்திற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்டக்  குழுவுக்கும் உடனான சந்திப்பொன்று ராஜகிரியவிலுள்ள  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொழிலாளர் சங்கத் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினராலும் கலந்துரையாடப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சார்ந்த தொழிலாளர் சங்கமானாலும்,  கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இச்சங்கம் தற்போது சுயாதீனமாகவே இயங்கி வருகிறது.

கூட்டத்தின் நிறைவில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயகேரவிடம்  இவ்விடயம் தொடர்பில் கேட்டபோது,

"ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தினர் தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு தெளிவுப்படுத்தினர். எனினும், இது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம்" என்றார்.

உள்ளூராட்சி தேர்தல்களின்போது தனித்தா அல்லது கூட்டணியாகவே செயற்படுவீர்கள் என கேட்டதற்கு,

" தற்போது நாம் அரசாங்கத்துடன் எந்தவித பிரச்சினையுமின்றி பயணிக்கிறோம். அரசாங்கத்தை மேலும் திறம்பட வழிநடத்திச் செல்வதற்கு தேவையான உதவிகளை நாம் ஜனாதிபதிக்கு வழங்குவோம். மேலும், எமது கட்சி சார்பாக உள்ளூராட்சி தேர்தலுக்கு  போட்டியிடுவதற்கு விண்ணப்பங்களை கோரியுள்ளோம்" என்றார்.

அப்படியாயின் நீங்கள் தனித்தா போட்டியிடவுள்ளீர்கள் என கேட்டதற்கு,

"இல்லை, அவ்வாறு தனித்து போட்டியிடவில்லை. என்றாலும், தேர்தலுக்கு போட்டியிடுவதற்கு தகுதியானவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா. அதற்காகத்தான்  விண்ணப்பிக்கும்படி கேட்டுள்ளோம்" என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு  இந்தியா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் உங்கள் கருத்து?

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஒத்துழைப்பு வழங்காமை பாதிப்பாகாது. எனினும், அவர்கள் எங்களுக்கு  துணை நிற்பார்கள் என நான் நினைக்கிறேன்" என்றார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.