ரம்யா என் மனைவியை விட அழகானவர்- ரியோ!!

 


பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையதளத்தில் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே


இந்த நிலையில் ரியோ நடித்த திரைப்படங்களில் ஒன்றான ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன


ரியோ ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான படத்தின் பாடல் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் ’பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் நாயகன் ரியோ, நாயகி ரம்யா நம்பீசன் மற்றும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஆகியோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பேட்டியில் ’என் மனைவி சுருதியைவிட ரம்யா மிகவும் அழகானவர், அவருடைய மூக்கு என் மனைவியின் மூக்கைவிட ஷார்ப்’ என்று ரியோ கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.