குளத்தில் நீராடச் சென்ற 15 வயது மாணவன் பலி


 குளத்தில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா இராகலை சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய யு.அபிலாஷன் என்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கொரன்டிக்குளத்தில் இன்று மதியம் நால்வர் குளிக்க சென்று நீராடிக் கொண்டிருக்கையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குளத்து நீரிழ் மூழ்கி காணாமல் போன சிறுவனை மீட்கும் நடடிக்கையிலே பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டு வந்த நிலையில், காணாமல் போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் இராகலை சூரியகந்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் , இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.