தனியார் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆணையர்!

 


கொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் பாதுகாப்பானது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் சென்னை பல்கலைக்கழக விடுதியில் 900 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை இன்று(ஏப்ரல் 21) மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர், “சென்னை தரமணியில் தயாராகும் சிகிச்சை மையம் 13வது மையமாகும். சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் 900 படுக்கை வசதிகளுடன் கூடிய மையத்தில் முதற்கட்டமாக 250 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், மக்கள் தங்களது வீட்டுக்கு வரும் தன்னார்வலர்களிடம் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதே முதல் நோக்கம். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா சிகிச்சை மையம் அமைக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவமனை, ஹோட்டல், தனியார் அமைப்புகளுக்கு கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை மையம் தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள்,தனியார் அமைப்புகள், படுக்கை வசதி, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதி குறித்த விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலரை அணுக வேண்டும்.

சென்னையில் தற்போது, 13 கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. மருத்துவமனைகளில் 12,000 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. மேலும், 10,000 படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

சென்னை மாநகராட்சியில் 28 ஆயிரத்து 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று குணமடைவோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து எடுக்கப்படும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் பெயர்களை 10 நாட்கள் கழித்து எடுத்துவிடுவோம். கொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் பாதுகாப்பானது. அதனால், தடுப்பூசி செலுத்த மக்கள் முன்வர வேண்டும்.

இஸ்ரேலில் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட்டுள்ளனர். அதனால், அங்கு முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையை நாம் சீக்கிரமாக அடைய வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது இன்னும் வேகமெடுக்கும்” என கூறினார்.

வினிதா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.