சொக்லேற் கனவுகள் 32 - கோபிகை!!

 


"என்ன நியாயம்....?"

"உன்னைக் கோவிக்கிறதை

முட்டாளால மட்டும்தான் 

செய்யமுடியும்...."


அனுதி சொல்ல

ஆ..வெனப் பார்த்தவன்,

"இல்லை அனு....பிழைதான்.."

என்றான்.


"நீ யார் ஆதி,

உன் தொழில்....

உன் பதவி...என்ன,

இதெல்லாம் யோசிக்காம

நான்தான் மடத்தனமாய்..."

கண்கள் கலங்கியது

அனுதிக்கு..... 


"அனுதி......அனு...அழுறியா...?"

"வேண்டாம்..அழாதை...

நீ வந்ததை கவனிக்காம..

நான்தான்..பிழைதான்.."


அவன் முடிப்பதற்குள்

"இல்லைடா....நான்தான்,

சின்ன விசயத்தை

பெரிசுபடுத்திட்டன்...."

என்றாள்....அவள்.


"ஏய்....ஏஞ்சல் - நீ 

என்ன செய்கிறாய் தெரியுமா?

எனக்காக என்னட்டயே

வாதாடுறாய்" என்றான். 


"உன்னட்ட என்ன,

உனக்காக 

உலகத்திட்டயே வாதாடுவன்"

என்றவளை 

ஆதூரமாய் பார்த்தவன்,

"மண்டு.....இந்த அன்பை

எப்பவோ சொல்லியிருக்கலாம்..."

என்றான் பெருமூச்சோடு.


"ஏன்...இப்ப சொன்னதில என்ன"

அவள் கேள்விக்கணை தொடுக்க

உதடுகளை வளைத்து

குறும்பாய் புன்னகைத்தான் அவன். 


வில்லங்கமாய் ஏதோ

சொல்லப்போகிறான்

என நினைத்தவள்,

"வா....பாட்டி கூப்பிடுறா"

என்றபடி, வாசலைப் பார்க்க,


இமைக்காது அவளையே 

பார்த்துக்கொண்டிருந்த

ஆதியின் முகத்தில்

சிந்தியது இளம்பிரியம். 


நீல மலர்களைப்போல

ஒளிர்ந்துகொண்டிருந்தன

நேசம் பூத்த - அந்த

அன்பு முகங்கள்....


'உள்ளத்தின் பலவீனங்களில்

மிக நல்ல பலவீனம், 

காதல்தான்' என

மேல்நாட்டு அறிஞர் 

சொன்னதாக வாசித்தது

நினைவில் வந்தது ஆதிக்கு. 


'எத்தனை உண்மை அது,' 

அவன் மீது குற்றம் சொல்லி

கோபம் கொண்டவள்,

அவனுக்காய் அவனிடமே

வாதாடுகிறாள், 


துறு துறுவென

மான்குட்டியாய் 

துள்ளிக்கொண்டிருந்தவள்

மெல்ல ஒளிகிறாள்....எண்ணக் காகிதத்தில்

வண்ணப் பூக்களாய்

சிரித்தன 

சிந்தனைத் துளிகள்....


கைகோர்த்துச் 

சேர்ந்து வந்த 

பேரனையும் பேத்தியையும்

கண்ணாரப் பார்த்தனர்

தாத்தாவும் பாட்டியும். 


"அம்மா பார்த்தபடி இருப்பா...

போயிற்று...பிறகு வாங்கோ"

பாட்டி சொல்ல

தலையாட்டி நடந்தனர்

இருவரும்....


வாசலில் அமர்ந்தபடி

பார்த்திருந்த பெற்றோரை

பார்த்த்தும் பயந்தபடி

அவன் பின்னால் 

பதுங்கினாள் அனுதி. 


சரியான பயம்தான்

உனக்கு.....

நடிக்காமல் வா....

அனுதியின் அம்மா கத்த,


'அத்தை...வேண்டாமே....'.

கண்களால் கெஞ்சியவன்

'ஏய்....கழுத்து இறுக்குது'

ரீசேட்டை பற்றியிருந்தவளின்

கரங்களை விலக்கினான். 


என்னம்மா....அனுக்குட்டி

இவன் ஏதாவது பேசினானா?

கேட்டபடி வந்த அத்தையிடம்

தாவிப்பாய்ந்தாள் அனுதி. 


அவளையே பார்த்த ஆதி,

இவள் குழந்தைத்தனங்கள்

இப்படியே நிலைக்கவேண்டுமென

மனதார கடவுளை வேண்டினான்....Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.