மன்னாரில் திங்கட்கிழமை துக்க தினம் அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள்!


ன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஸ்ரிக்குமாறு மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இனம்,மதம் மொழி கடந்து மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

பாதீக்கப்பட்ட மக்களுக்காக நீதியை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் குரல் கொடுத்தார். தமிழர்,முஸ்ஸீம்,சிங்களவர் என்ற பாகு பாடு இன்றி அனைரையும் நேசிக்கும் ஒருமனிதர்.

ஆன் மீகத்திற்கு அப்பால் மனித நேயத்தை நேசித்தவர்.காணாமல் ஆக்கப்பட்டவர்,கடத்தப்பட்டவர்கள்,அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இறுதி மூச்சு உள்ள வரை குரல் கொடுத்தவர்.

இவரது இழப்பு ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் பாரிய இழப்பு. தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் துக்க தினத்தை நினைவு கூற வேண்டிய கடற்பாட்டில் உள்ளோம்.

எனவே ஆயர் அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர் வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் கமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஸ்ரிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.