திடீரென பரப்பான கொழும்பு அரசியல்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று திங்கட்கிழமை முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி நடைபெறவுள்ள தொழிலாளர் தின கொண்டாட்டம் தொடர்பில், மறைந்த கட்சி தலைவர்கள், இராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டதை தொடர்ந்து கலந்துரையாடப்பட்டது.

கொரோனா சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மே தின பேரணிகளை மாத்திரம் நடத்துவது தொடர்பில் இதன்போது கட்சி தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

எனினும் பிலவ வருடப் பிறப்புக்குப் பின்னரான முதலாவது சந்திப்பாக இச்சந்திப்பு இருந்தாலும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனியாகவும், பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களை தனியாகவுமே பிரதமர் சந்திக்கவுள்ளாரென கூறப்படுகிறது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ்இ தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுடன், 11 கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.