எங்களின் கருத்த வானம் - கவிதை!!

 


அரக்க பரக்க 

வீட்டு வேலை 

செய்து முடித்து 

கிளம்பிப் போனா 

பஸ்ஸ்டாப்பல 

கூட்டம்!

ஆபீஸ் போகும் பஸ்ஸில் 

ஏறிப் போனா ஃபுட்போர்டுல 

இடித்து  இருக்குது 

பயணிப் பசங்க கூட்டம்!

மேடுபள்ளம் 

ஏறி இறங்கினால் போதும் 

ஊஞ்சல் போல் ஆடி 

உரசிப் பார்க்கிறது 

உத்தண்டி

வகையராக்களின் வேடம்!

பஸ் நின்றதும் 

ஸ்டாப்புல இறங்கி 

ஆபீஸ் உள்ளே வந்தால் 

ஆபீஸர் கையில் 

அதட்டுகிறது அட்டன்டன்ஸ்

லேட்டா வந்தியா 

அதட்டலோடு அப்புறமா கையெழுத்துப்போடு 

கனிந்தும் கண்ணடிக்கும் 

கருணை சொரூபமாய் 

வேலையைப் பார்க்கும் 

சாக்கோடு தனிமையில் 

வந்திறங்கும் விசாலமான 

வில்லன்கள்!

மூடுஅவுட்டாகி சீட்டில் 

அமர்ந்து. ஃபைலைப் 

பார்க்க தூசி தட்டினாள் 

தொடர் தும்மலோடு விம்மி 

விழுந்தான்  பக்கத்து சீட்டு 

பரமசிவன்!

திட்டல் புழுக்கத்தினூடே

புதிய ஆபீஸரும்

என் மேஜைக்கு வந்து

பையிலுக்குள் கை 

கைகுலுக்கி காயா? பழமா? 

காட்டச் சொல்லி அவதாரமாய் காட்சி(தந்தார்) தருவார்…

சனியனைப் பார்க்க 

மறந்த அவருக்கு எல்லா 

முகங்களும் எங்களைப் 

பார்த்து சிவந்து போனது 

கணத்தில் நான் கொடுத்த 

தோசை சூடு....

கருவறை பிறப்பு தொடங்கி 

இறப்புக் குள்ளான 

காலங்களில் எத்தனை 

எத்தனை அவஸ்தைகள் எங்களுக்குள்ளும் 

திருஷ்டிக்கப்படுகிறது.....

இறுகிய நெருங்கிய 

எலும்புகளோடும் 

மனங்களோடும்  சமைந்த 

சதை சாம்பிராணிகளாய்

 பார்க்கும் ஆண்களின் 

தேசத்தின் விடுதலைக்காகப் 

பறந்து திரிகிறது எங்களின் 

கருத்த வானம்!....


Ambi PrabhasTamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.