12 ஆண்டுகள் எதுவும் மாறவில்லை!


இறந்து கிடப்பவளின் மார்பகங்களை உரசி பார்த்த அதே சப்பாத்து கால்கள் இப்போதும் அந்த மண்ணில்.
கையை, கண்களை கட்டி பிடரியில் சுட்ட அதே துப்பாக்கிகள் இப்போதும் அந்த மண்ணில்.
சரணடைந்த தனது பிள்ளைகளை இப்போதும் தேடும் அம்மாக்கள்.
தாயை இழந்த கன்றுகள், கூடிழந்த பறவைகள், நிலமிழந்த அகதிகள். எதுவும் மாறவில்லை,
செல் விழுந்து பாறி போயிருக்கும் பனைகள், சன்னங்கள் பாய்ந்த மரங்கள்.
கூடு திரும்ப காத்திருக்கும் குருவிகள், தேசம் ஒன்றுக்காக காத்துகிடக்கும் மக்கள்.
எருக்கலைகளின் நடுவே பெருந்தீயை அணைத்து பிடிக்கும் அந்த கைகள். பார்த்த கொடூரங்களை சொல்லமுடியாமல் மௌனித்தருக்கும் கடல்.
கரும்புகையால் மூடியிருக்கும் வானம் விடியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.