சமூக இடைவெளி - சுகாதார நடைமுறைகளை மறந்த மக்கள்📸


 'சமூக இடைவெளி - சுகாதார நடைமுறைகளை மறந்த மக்கள்' நாட்டில் நடைமுறையில் இருந்த பயணத்தடை இன்று காலை தற்காலிகமாக தளர்த்தப்பட்டது. காலை முதலே அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

 உள்ளக போக்குவரத்து சேவையும் முன்னெடுக்கப்பட்டது. நகர்ப்பகுதிகளுக்கு வருகை தந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை மறந்துச்செயற்பட்டனர். 

பொது போக்குவரத்து சேவையிலும் சுகாதார நடைமுறை பின்பற்றப்படாததை காணமுடிந்தது. ஹட்டன், நுவரெலியா, தலவாக்கலை ஆகிய நகரங்களிலும் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது.

 மக்களே, அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டில் இருந்து வெளியில் வருவோம். அதுவும் ஒருவர் வந்தால் போதும். அவ்வாறு வருபவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். 





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.