மீண்டும் தமிழுக்கு வரும் டாப்ஸி

 


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷூடன் ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் எக்கச்சக்கப் படங்கள் நடித்தாலும், அவ்வப்போது தமிழிலும் தலைக்காட்ட தவறியதில்லை.

2019ல் டாப்ஸி நடித்து பட்லா, கேம் ஓவர், மிஷன் மங்கள், சாந்த் கி ஆன்க்' என நான்கு படங்கள் வெளியானது. 2020ல் `தப்பட்` படம் வெளியானது. இவர் நடித்த எல்லாமே சூப்பர் ஹிட். குறிப்பாக, தப்பட் மிகப்பெரிய விவாத வெளியைத் திறந்துவிட்டது.

டாப்ஸிக்கு அடுத்தடுத்து 'ஹசீன் தில்ருபா', 'ராஷ்மி ராக்கெட்' படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இதில், `ஹசீன் தில்ருபா' வருகிற ஜூலை 2ஆம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

விஜய்சேதுபதியோடு தமிழில் ஒரு படம் நடித்துமுடித்திருக்கும் நிலையில், மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் டாப்ஸி.

இந்தப் படத்தை `கே 13' படம் இயக்கிய பரத் நீலகண்டன் இயக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகும் ஏலியன் படமாக இருக்கப் போகிறதாம்.

இந்தியா மாதிரி ஒரு நாட்டில் ஏலியன் இருந்தால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் களம். இந்த கான்செப்டுக்காகவே படத்துக்கு டாப்ஸி ஓகே சொல்லிவிட்டாராம். தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்காம். எக்கச்சக்க விஷுவல் எஃபக்ட்ஸ் தேவைப்படுவதால், படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் தயாரானாலும், முழுக்க முழுக்க இந்திய கலைஞர்களை மட்டுமே வைத்து உருவாக்கவும் திட்டமாம்.

-ஆதினி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.