கொழும்புக்குள் 3 மணித்தியாலயத்தில் பல ஆயிரம் வாகனங்கள்!!


 மூன்று மணித்தியாலயத்தில் கொழும்புக்குள் 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வருகைத்தந்துள்ளன. இவ்வாறு கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்கள் அனைத்தும் அத்தியாவசிய சேவை பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது மாத்தளை பகுதியிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அதற்கமைய 147 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் குளியாபிட்டி பகுதியில் 100 பேரும் , கண்டி பகுதியில் 85 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 21 ஆயிரத்து 775 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் 3,969 வாகனங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன் , அவற்றில் பயணித்த 4,191 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.


இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிக்கு புறம்பாக பயணிக்க முற்பட்ட 154 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் பயணித்த 275 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


இதன்போது கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்புக்கமைய நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களே அதிகளவில் வந்துள்ளதாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 16 ஆயிரத்து 571 வாகனங்கள் இவ்வாறு வருகைத்தந்துள்ளன. இதன்போது ஐலெவல் வீதி மற்றும் கண்டி வீதி ஊடாகவே கொழும்புக்குள் பெருந்தொகையான வாகனங்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில் , 8,412 வாகனங்களில் சுகாதார பிரிவினரும், 9498 வாகனங்களில் அரச உத்தியோகத்தர்களும் வருகைத்தந்துள்ளதுடன் , 3968 வாகனங்களில் நோயாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அதற்கமைய 3 மணிநேரத்திற்குள் 62 ஆயிரத்து 235 வாகனங்கள் கொழும்புக்குள் வருகைதந்துள்ளன.


கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்களை கணக்கீடு செய்வது மட்டுமன்றி , அந்த வாகனங்களில் வருகைத்தருபவர்கள் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனரா? , அவர்கள் அத்தியாவசிய சேவை பணியாளர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது. இந்த சுற்றிவளைப்புக்காக ஆறு பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , இதன்போது பொலிஸார் எரிய பின்தொடர்ந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதன்போது தொழிலுக்கு செல்பவர்கள் தங்களது நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை பொலிஸாருக்கு காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.