எஸ்.பி. பிக்காக கமல் பதிவு செய்த டுவிட்!

 


உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் தெரிந்ததே. கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களின் பாடல்களை எஸ்பிபி தான் பாடி இருப்பார் என்பதும் அவர் கமல்ஹாசன் படத்திற்காக பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர்ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமின்றி தெலுங்கில் கமலஹாசன் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்படும்போது கமல்ஹாசனுக்கு தமிழ் டப்பிங் குரல் எஸ்பிபி தான் கொடுத்திருப்பார் என்பதும் அது கமல்ஹாசனே டப்பிங் பேசியது போல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் இன்று எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:


அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.