மட்டக்களப்பில் குடும்ப தகராறில் நால்வர் கைது!!


 மட்டக்களப்பு- கருங்காலிச்சோலை பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 4 பேரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) குறித்த இரு குடும்பங்களிலுள்ள பெண்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வாய்த்தர்க்கம் இரு குடும்பங்களின் ஆண்களிடையே சண்டையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக  இரு குடும்பங்களைச் சேர்ந்த 4 பேரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.