தியாகி.பொன்.சிவகுமாரனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!!

 


 
இன்று, முதலாவது தற்கொடையாளர் தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் 47ம் ஆண்டு நினைவு தினம்  முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.


கொவிட் 19 தொற்றையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்ற நிகழ்வில் சிவாஜிலிங்கம் அவர்களினால் மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழினத்தின் தேசிய விடுதலை போராட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் சிவகுமாரன்.


1974ஆம் ஆண்டில் பொலீஸாரின் சுற்றிவளைப்பில், நஞ்சருந்தி வீரமரணம் அடைந்தார்.  அவரின் பூதவுடல் உருப்பிராயில் தகனம் செய்யப்பட்ட போது பெண்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர் யாழ் இந்துக் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து இளமைக் காலத்திலேயே மாணவர் எழுச்சி பேரவையில் தலைவனாக இருந்து பல போராட்டங்களை நடாத்தியவர்.
சிவகுமரனுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தொடர்புண்டு. இவர் இறந்த தினத்தன்று தான்
தமிழர்களின் தலைவர் சிவசிதம்பரம் இறந்துள்ளார்.
இவருடைய பிறந்த தினத்தில் தான் தலைவர் அமிர்தலிங்கமும் பிறந்துள்ளார். அத்துடன் இவர் இறந்த தினத்தன்று தான் தனிச் சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு அரசியலுடன் தொடர்புண்டு.
விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரிய பங்குண்டு. எத்தனை தடைகள் வந்த போதிலும் இவருக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள். எங்களுடைய மண்ணில் எங்களை நாம் ஆளக் கூடிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பது தான் தாயகத்திற்காக உயிர்நீத்தவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.