சைலோ தளங்களை நிறுவுகிறது சீனா!!

 


கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை தன் பாலைவனப் பகுதியில் சீனா நிறுவி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

செலுத்துவதற்காக பேலிஸ்டிக் ஏவுகணைகள் போன்றவை தயாராக வைக்கப்படும் குழி போன்ற தளங்களான 119 சைலோக்களை, சீனா, கன்சு மாகாணத்தில் இருக்கும் பாலைவனப் பகுதிகளில் நிறுவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால், சீனாவின் அணு ஆயுத கொள்கையில் வரலாறு காணாத மாறுதல்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.

இந்த சைலோக்களில் சீனாவின் DF41 ஏவுகனைகள் வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையோ, DF41 ஏவுகனை திட எரிபொருளில் இயங்கக் கூடியது என்றும், அந்த ஏவுகணை ஹை மொபிலிட்டி லொஞ்சர் வாகனம் மூலம் ஏவப்படக்கூடியது எனவும் கூறியுள்ளது.

அமெரிக்க காங்கிரஸுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத் தலைமையகம் கொடுத்த அறிக்கையில் சீனாவிடம் சுமார் 200 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சீனா தன் இராணுவத்தை நவீனமயமாக்கி வருவதால், இந்த ஆயுதங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பகுப்பாய்வாளர்களின் கணிப்புப் படி அமெரிக்காவிடம் 3,800 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இதில் 1,357 ஆயுதங்கள் ஏவத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.