வரகு குரக்கன் தோசை MILLET DOSAI

 

சிறுதானியங்களை நாம் அரிசி , கோதுமை பயன்படுத்துவது போலவே வீட்டில் சமைத்து உண்ணலாம். தோசை, இட்லி , பொங்கல் , கஞ்சி , பிட்டு போன்றவற்றை மிகவும் எளிதாக சிறு தானியங்களை பயன்படுத்தி செய்ய முடியும். இவை மிகவும் ஆரோக்கியமானதும் சத்து நிறைந்தவை. நீரிழிவு நோயாளருக்கு குரக்கன் பிட்டையே கொடுத்து அலுப்படிப்பதிலும் பார்க்க பல வகையான உணவுகளை செய்து அவர்களையும் மகிழ்ச்சி படுத்தலாமே! 


சிறுதானிய உணவுகள் சகலருக்கும் எளிதில் சமிபாடடைய கூடிய போசணை மிக்க உணவாகும். 


வரகு குரக்கன் கொண்டு தோசை எப்பிடி தயாரிக்கலாம் என்று இப்பதிவில் பார்ப்போம்.


தேவையானவை:


▪️வரகு அரிசி - 200 கிராம்

▪️கோதுமை - 100 கிராம்

▪️குரக்கன் - 100 கிராம்

▪️உளுந்து - 2 tsp 

▪️சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை

▪️கறிவேப்பிலை - சிறிதளவு

▪️வெந்தயம் - 2 tsp 

▪️நல்லெண்ணெய் - தேவையான அளவு

▪️உப்பு - தேவையான அளவு


செய்முறை:


வரகு அரிசி, குரக்கன் , கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் ஒன்றாகக் கலக்கவும். இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இது மிகவும் சத்தான தோசை.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.