9வது பிரதமர் மலேஷியாவில் நியமிக்கப்பட்டார்!


 மலேஷியாவின் பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் மன்னரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையை இழந்தமையினால் மொஹிதின் யாசின் பதவியிலிருந்து விலகிய நிலையில் மன்னரினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்மாயில் சப்ரி யாகூப் யாசினின் அமைச்சரவையி;ல் சிரேஷ்ட அமைச்சராகவும் துணை பிரதமராகவும் செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மலேஷியாவின் 9வது பிரதமராக நாளைய தினம் 61 வயதுடைய யாகூப் பதவியேற்க உள்ளார்.

புதிய பிரதமர் நியமனத்தின் பின்னர் நாட்டில் அண்மைகாலமாக நிலவிய நெருக்கடி நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.