சிலிர்ப்பு - கவிதை!!

 


என்னைக் கண்டதும்

புதிதாய்ப் பூத்தப் பூவைப்போல்
வெட்கப்படுகிறாய்.
உன் மெல்லிய ஸ்பரிசங்களால்
காற்றின் கைகோர்த்தபடி
பூவின் வாசமாய்
என்னைத் தழுவிப் போகிறாய்.
சொப்புக்குள்
அடைந்து கிடக்கும் நீரில்
முழுநதியைக் காணும்
மழலையாய்...
உன்னைக் கண்டுணர்ந்து
மெய்ச்சிலிர்க்கிறேன்
நான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.