தமிழரசு கட்சியின் கதை விரைவில் முடிவுக்கு வரும்!

 


தமிழரசு கட்சியின் கதை விரைவில் முடிவுக்கு வரும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வீ.ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி எனது நீண்டகால அனுபவத்தின்படி இந்திய முறைமையை ஒத்ததேயாகும். அதற்கு இன்று ஜனாதிபதி உள்ளிட்ட பலருடனும் பேசியிருக்கின்றேன்.

கடந்த காலத்தில் கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை இவர்கள் சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை. இறுதியில் 3 இலட்சம் மக்கள் இறந்ததுதான் மிச்சமானது. அந்த 3 இலட்சம் மக்கள் இறந்தமைக்கு காரணமானவர்கள் இவர்கள். எந்த நேரமும் அரசாங்கத்துடன் பேசி நிறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருந்தது.

இவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களை தட்டிக்கழித்தனர். ஆனால் ஜெனிவா தொடர்பில் பேசுகின்றனர். முதல் முதலில் ஜெனிவா தொடர்பில் பேசும்பொழுது, அங்கு சென்று என்னத்தை பேசுவது என்றார்கள். நாங்கள் போக வேண்டுமோ எனவும் போகாவிட்டால் நாங்கள் துரோகிகளோ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்தனர்.

ஜெனிவா போகாவிட்டால் நாங்கள் துரோகிகளா என சிறிதரன் சொல்லியிருந்தார். அயல்நாடுகள் அங்கு போகவேண்டாம் என கூறியதாக சேனாதிராஜா கூறியிருந்தார். 4 நாட்சிகள் ஒன்றாக இருந்தார்கள். இப்பொழுது, அவர்கள் பிரிந்து உள்ளனர். அண்மைய செய்திகள் என்னவெனில் அந்த நான்கு பேர்தான் தேசிய அமைப்புக்கள் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சம்பந்தனுக்கோ, செல்வம் அடைக்கலநாதனுக்கோ ஜெனிவா விடயம் தொடர்பில் கையாள்வதற்கான எந்த உரிமையும் கிடையாது மாத்திரமல்ல கடமையும் கிடையாது.

ஏனெனில் அவர்கள் இதுவரை காலமும் செய்து வந்தது அவ்வாறான வேலையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.