சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் இன்று.


மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொது மக்கள் 09.09.1990 ஆம் ஆண்டு மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இவற்றில் 5 பிள்ளைகள் விசேட தேவையுள்ள பிள்ளைகள், மேலும் 42 பிள்ளைகள் 10 வயதிற்குட்பட்ட பிள்ளைகள், 85 பேர் பெண்கள், 28 பேர் முதியவர்கள்.
சிங்கள இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்தே இந்த கோர தாண்டவத்தை அரங்கேற்றியது.
வாளினால் வெட்டியும், கத்தியினால் குத்தியும் துப்பாக்கிகளினால் சுடப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்டனர்.
இக்கொலை சம்பந்தமாக வழக்கம்போல் ஏமாற்றி கண்துடைப்பிற்காய் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இடம் பெற்றபோதும் இவற்றுக்கான எந்தவித மேலதிக நடவடிக்கைகளும் இன்று வரை மேற்கொள்ளவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.