இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!!

 


இந்தியாவில் எட்டு பெண்கள் உள்பட 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பெண்கள் உள்பட 10 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக இந்தியா சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் வெளியான தகவலானது, இரகசிய தகவலின் அடிப்படையில், சுங்க அதிகாரிகள் குறித்த அனைவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்ததாக IANS தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-171 இல் 140 பயணிகளுடன் பயணித்துள்ளனர்.

தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பானது சுமார் 10 கோடி மதிப்பாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.