கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில்; கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், 6 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடலோர பகுதிகள் மற்றும் அதனை அண்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது.
இதன்காரணமாக எதிர்வரும் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை