கனடாவைப் புரட்டிப்போட்ட இயற்கையின் சீற்றம்!!
கனடாவிலுள்ள கொலம்பியா மாவட்டம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம், புயல், நிலச்சரிவு, மழை போன்ற இயற்கை பேரிடர்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாவட்டத்தில் வான்கூவர் கடற்கரை நகரம் ஒன்று அமைந்துள்ளது. அந் நகரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலில் காரணத்தால் மிகவும் கடுமையான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவ லுள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தாக்கியுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதோடு இயற்கை சீற்றத்தின் காரணமாக அங்குள்ள சுமார் 10,000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நிலச்சரிவில் பாதிப்படைந்தவர்களை தேடும் முயற்சியில் மீட்புக் குழு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் கனமழையால் இடுப்புவரை வெள்ளநீர் பாய்வதால் மீட்புக் குழுவினருக்கு பாதிக்கப்பட்டவர்களை தேடுவது மிகவும் கடினமாக உள்ளது.
நிலச்சரிவில் சிக்கியுள்ள கணக்கில் வராத மக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை. வாகன ஓட்டிகள் பலர் மண்சரிவில் புதைந்து இருக்கலாமென்று கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை