பிரித்தானியாவில் வீட்டுத் தீயில் பலியான இலங்கையர்கள்!!

பேஸ்லிகீத் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் நிருபா-யோகன் தங்கவடிவேல் தம்பதியினர். யோகன் 15 வருடமாக பிரித்தானியவில் வாழ்ந்து வருகிறார்


 . இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்சாஸ்னாஒரு வயது மகள் மற்றும் தபீஷ்நான்கு வயது மகன்.  இவரின் தயார் இலங்கையில் இருந்து பேரக்குழந்தைகளை பார்வையிட வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர் இன்று இலங்கைக்கு செல்லவேண்டியவர் என்றும் அதற்காக ஆடைகளை அடுக்கி ஏற்பாடு செய்துகொண்டு இருந்ததாகவும் அவர்களது ஒன்று விட்ட சகோதரர் தெரிவித்தார். இவர்களோடு இருந்த யோகன் அவர்களின் சகோதரர் யன்னல் வழியாக குதித்து தப்பியதாக தெரியவருகிறது. இவரின் கால்கள உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யோகன் அவர்கள் கடை ஒன்றில் பணிபுரிவதாகவும் சம்பவம் நடைபெற்ற வேளையில் அவர் வேலை செய்துகொண்டு இருந்ததாகவும் மனைவி வீட்டில் தீ ஏற்பட்டு விட்டதாக நேற்று வியாழக்கிழமை 8.30 மணியளவில்  தொலைபேசியில் கூறியுள்ளார். பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும். யோகன் வீட்டுக்கு வந்தபொழுது மனைவியும் குழந்தைகளும் இறந்து விட்டதாகவும் யோகன் துயரம் தாங்கமுடியால் அழுது கொண்டே நிலத்தில் விழுதுள்ளார்

அயலார் தெரிவிக்கையில்தீ வீட்டின் கீழ் பகுதில் பிடித்து வீட்டின் மேல் பகுத்திக்கு பயவியதாகவும் தெரிவித்தனர். இந்த தீ சம்பவத்துக்கு பழுதைந்த பயர் அலாரம் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

குழந்தைகள் அவர்களுடைய படுக்கை அறையிலே இறந்திருக்கலாம் என்றும் தாயார் யன்னலுக்கு அருகே இறந்ததாகவும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இவர்களது குடும்பம் மூன்று மாதங்களுக்கு முன்னரே இந்த பகுதிக்கு £425,000 மதிப்புடைய வீட்டை தனது சகோதரிகளின் வீட்டு உள்ள பகுத்திக்கு அருகிலேயே இவ்வாறு வீடு வாங்கி வந்ததாகவும் நண்பர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லையென்றும் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

லண்டன் மேயர் தனது ஆழ்ந்த இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.