டாக்டர் பட்டம் பெற்ற இளம் நடிகர்!


தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பு, தனித்துவமான நடிப்பு, மற்றும் உதவும் மனப்பான்மை போன்ற பல அடிப்படையில் நடிகர்களுக்கு பல்கலை கழகங்கள், கலைத்துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் தற்போது இளம் நடிகர் சிலப்பரசன் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்கள் பார்க்கலாம்: 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் : தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமான திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். (Sivaji Ganesan) மேலும் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படம் தான். சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை போற்றும் வகையில் 1986ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிவாஜிக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

எம் ஜி ராமச்சந்திரன் :  தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், தமிழ்நாட்டில் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்தவர் எம்ஜிஆர். (M. G. Ramachandran)  இவரின் ரசிகர்களால் புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் செல்வன், வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். எம்ஜிஆருக்கு 1974 ஆம் ஆண்டு அரிசோனாவின் உலகப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது

விஜயகாந்த் : கேப்டன் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் தான் விஜயகாந்த். (Vijayakanth) இவர் திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். மேலும் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். 2011ஆம் ஆண்டு ப்ளோரிடாவில் சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் நிறுவனம் கேப்டன் விஜயகாந்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

கமல்ஹாசன் : நடிப்புக்காக பல அர்ப்பணிப்பு செய்பவர் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan). இவருக்கு 2005 இல் சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அதன்பிறகு 2019 இல் கலைத்துறையில் 60 ஆண்டுகாலம் பயணம் செய்த மகத்தான சாதனைக்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் கமலஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

விஜய் : தனது திறமையான நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் வரவேற்புகளை தளபதி விஜய் (Vijay) பெற்றுள்ளார் . இவர் திரைப்படத் துறையில் சாதனை படைத்ததற்காகவும், ஏழைகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்ததற்காகவும் 2007 ஆம் ஆண்டு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் மாநாட்டில் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விக்ரம் : தமிழ் சினிமாவில் உடலை வருத்திகொண்டு நடிப்பவர்களில் நடிகர் விக்ரம் (Vikram) ஒருவர். தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கிறார். 2011ம் ஆண்டு இத்தாலியில் யூனிவர்சிட்டா போபோலே டெக்ஷீஸ் ஸ்டுடிம் மிலானோவான் என்ற பல்கலைக்கழகம் விக்ரமின் சிறந்த நடிப்பு திறமையை கௌரவித்து டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சிலம்பரசன் : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார் சிலம்பரசன் (Silambarasan). மேலும் நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், நடிகர் என்று பல்வேறு திறமைகள் கொண்ட சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் வரும் ஜனவரி 11ம் தேதி நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.