முல்லைத்தீவு கடற்கரைக்கு படையெடுக்கும் மக்கள்!


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய கப்பல் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ள நிலையில் பிரதேச மக்கள் அதனை பர்வையிட படையெசுத்து சென்றுள்ளனர்.

சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் இந்த கப்பல் செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது.

இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் கப்பல் கரை ஒதுங்கியுள்ளதை கண்டு உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து கரை ஒதுங்கியுள்ள கப்பலை கடற்படையினர் முதற் கட்டமாக பார்வையிட்டுள்ளதோடு பெருமளவான மக்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கப்பலை யாருடையது எங்கிருந்து வந்துள்ளது விபத்துக்குள்ளாக்கியதா போன்ற கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.