அரசாங்கம் கவிழ்க்கப்படும் - சஜித்

 


கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த துரதிர்ஷ்டவசமான அரசாங்கம் கவிழ்க்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஹசலக்கவில் தெரிவிப்பு.


தனது நிதியத்தில் இருந்து இலங்கை இதுவரை நிதி உதவி கோரவில்லை என சர்வதேச நாணய நிதியம் (IMF) உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளதோடு, எனினும் IMF நிறுவனத்திடம் அரசு பேசியதாக கூறப்படுகிறது என்பதும், இதில் உண்மையைச் சொல்வது அரசாங்கமா அல்லது IMF நிறுவனமா?  என்பது குறித்து நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொய்யினாலயே இந்த அரசாங்கம் தனது இருப்பை பாதுகாத்து கொற்கின்றது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களை ஏமாற்றுவதே அவர்களின் அவ்அப்போதைய நிகழ்ச்சி நிரல் எனவும் தெரிவித்தார்.

இன்று (13) காலை உடுதும்பர ஹசலக்கவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். மக்கள் சந்திப்பிற்கு முன்னதாக ஹசலக்க நகரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர் காமினி குலரத்னவின் உருவச் சிலைக்கும், மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலைக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர்,இராணுவ வீரர் காமினி குலரத்னவின் தாயாரையும் சந்தித்தார்.

மக்கள் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்;

“சீனியின்றி தேனீர் அருந்துவோம்,  மிளகாயின்றி ரசம் உண்போம்,  புல்லையேனும் நாம் உண்போம் என்று வரலாற்றில் சிலர் கூறியதாகவும்,அன்று போலவே இன்றும் பசளையின்றி விளைச்சல் பெறுவோம்,நெல்லின்றி சோறு சாப்பிடுவோம்,  மின்சாரமின்றி நாம் வாழ்வோம் என்று பொறுமையுடன் மக்கள் இன்று வாழ்வார்கள் என அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது போலவும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நீங்கள் இன்னும் பொறுமையாக காப்பீர்களா? உங்களுக்கு உரம் தராத அரசாங்கம் இன்னும் ஆட்சியை தொடர வேண்டுமா? ஒவ்வொரு வீட்டுக்கும் கேஸ் குண்டைக் கொடுத்த அரசாங்கம் இன்னும் தொடர வேண்டுமா? நாடு முழுவதும் மக்கள் வரிசையில் நிற்கும் நிலையிக்கு இந்நாட்டை உருவாக்கிய அரசாங்கம் இன்னும் தொடர வேண்டுமா? உங்களின் ETF மற்றும் EPF-ஐ கொள்ளையடிக்க முயற்சிக்கும் அரசாங்கம் இன்னும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா? ஆட்சிக்கு வந்த உடனயே பணக்கார குபோரர்களுக்கு வரிச்சலுகை அளித்து நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த இந்த கொடூர அரசாங்கம் இன்னும் தொடர வேண்டுமா? கொரோனாவில் 15,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுக்கும் வரை கட்டுக்கதைகளின் பிரகாரம் பணியாற்றிய அரசாங்கம் இன்னும் ஆட்சியில் தொடர வேண்டுமா?”என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனவும், அதன் பிறகு அடுத்த தலைமுறையின் பிரச்சினைகளுக்கு விடை தேடும், திறமை, ஆற்றல் மற்றும் இயலுமைக்கு இடமளிக்கும் அரசை உருவாக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர், இதனை மோற்கொள்ள தற்போதுள்ள மாற்று சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே எனவும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.