சிறுவர் மருத்துவமனை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்!

 


உக்ரைனின் மரியுபோலில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலை மீது ரஷ்யா வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதன்போது இடிபாடுகளுக்குள் குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நகரம் உள்ளிட்ட 5 நகரங்களில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ள போதும், அங்கு தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான “காட்டுமிராண்டித்தனமான” பலத்தை இவ்வாறு பயன்படுத்தியமைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

குறித்த நகரத்தில் மாத்திரம் ரஷ்யாவின் வான் தாக்குதலில் இதுவரை 1,170 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நகரின் துணை மேயர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.