யாழ்.புத்துார் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம்

 


யாழ்.புத்துார் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் மாசிலாமணி குகபிரசாசம் (வயது59), குகப்பிரகாசம் சுகுணா(வயது55) என்ற கணவன் மனைவியே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (10) வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
 
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, மரணச் சடங்கொன்றிற்காக கணவன், மனைவி இருவரும் சென்று வீடு திரும்பி நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கி நீராடச் சென்ற போது மனைவியை முதலில் மின்சாரம் தாக்கிய போது அவரைக் காப்பாற்ற சென்ற கணவரும் மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றும் மகள் வீட்டிற்கு வந்து தாய், தந்தையை தேடிய போது இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையிலேயே கண்டுள்ளார். 
 
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.