கடலை மா முறுக்கு எப்படி தாயாரிப்பது !
தேவையான பொருட்கள்:
1 சுண்டு கடலை மா
½ சுண்டு அவித்த கோதுமை மா
2 மே.க வெள்ளை அரிசி மா
¼ தே.க மஞ்சள்தூள் (+/-)
2 தே.க மிளகு சீரகத்தூள் (+/-)
2 தே.க மிளகாய்த்தூள் (+/-)
2 மே.க எள்ளு (+/-)
1 மே.க பட்டர்
175 மி.லீ தண்ணீர் (+/-)
உப்பு
எண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை அரித்து வைக்கவும். அதனுடன் அவித்த கோதுமை மா, அரிசி மா, மிளகு சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,எள்ளு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாககக் சேர்த்துக் கலந்து, பட்டர் சேர்த்து பிசைந்து விடவும்.
அந்த மாக்கலவையினுள் தேவையான அளவு தண்ணீரை, சிறிது சிறிதாகத் தெளித்து பிசைந்து, அடித்துக் குழைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணையை விட்டு மிதமான தீயில் சூடேற்றவும்.
முறுக்கு உரலில் முறுக்கு மாவை வைத்து ஒரு பேக்கிங் பேப்பரில் அல்லது கரண்டியில் அல்லது இடியப்பத் தட்டில் விரும்பிய வடிவில் புழிந்து, சூடான எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான முறுக்கு தயார்!
குறிப்பு:
1 சுண்டு = 397 கிராம் ரின்பால் / மில்க்மெய்ட் ரின்னில் மேவி அளந்து எடுப்பது.
விரும்பினால் மிளகுசீரகத்தூள் அளவைக் குறைத்து, சின்னச்சீரகம் அல்லது ஓமம் சேர்த்தும் முறுக்கு செய்யலாம்.
மாவின் தன்மைக்கேற்ப தண்ணீரின் அளவு மாறுபடும்.
கருத்துகள் இல்லை