சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

 


சீனாவில் 133 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மலைப் பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. சீனாவின் இஸ்டர்ன் பேசன்ஞர் ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் அங்குள்ள மலையில் மோதி விபத்தில் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது,பயணிகள் விமானம் காட்டுப் பகுதியில் மோதி ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக குவாங்சி மலைப் பகுதியில் மோசமான தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

சீனா விமான விபத்து

சீனாவின் குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்கு 133 பயணிகளுடன் சென்ற சீன இஸ்டர்ன் பேசன்ஞர் ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனம் குவாங்சி என்ற மலைப் பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளதாகச் சீனாவுக்குச் சொந்தமான சிசிடிவி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமான விபத்து காரணமாக அங்குள்ள காட்டுப்பகுதியில் மோசமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு

அதேநேரம் இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விபத்தில் சிக்கிய விமானம் போயிங் 737 வகை விமானம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் இந்த விமானம் விபத்தில் சிக்கி உள்ளது. விபத்து ஏற்பட்ட உடன் காட்டுத் தீயை அணைக்கவும் விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக குவாங்சி மாகாண அவசர மேலாண்மை பணியகம் தெரிவித்துள்ளது.

எப்போது

சம்பவ இடத்திற்கு விரைவாகச் சென்றுள்ள மீட்புக் குழுவினர், முதற்கட்டமாகத் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சீன நேரப்படி இந்த விபத்து பிற்பகல் 1.11 மணிக்கு குன்மிங் நகரில் இருந்து புறப்பட்டு உள்ளதாக FlightRadar24 குறிப்பிட்டுள்ளது. பின்னர் இந்த விமானம் பிற்பகல் 2.20 மணி அளவில் 3225 அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து மாலை 3.05 மணிக்கு இந்த விமானம் மோதி விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

மோசமான விபத்துகள்

சீனா விமான போக்குவரத்துத் துறை கடந்த 10 ஆண்டுகளாகவே உலகிலேயே மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறையாக இருந்து வந்துள்ளது. ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்கின் கூற்றுப்படி, சீனாவின் கடைசி மோசமான ஜெட் விபத்து என்பது கடந்த 2010இல் ஏற்பட்டுள்ளது. அப்போது கடந்த 2010ஆம் ஆண்டு ஹெனான் ஏர்லைன்ஸின் எம்ப்ரேயர் இ-190 பிராந்திய ஜெட் விமானம் யிச்சுன் விமான நிலையத்தின் அருகே ஏற்பட்ட விபத்தில் விமானத்தில் பயணித்த 96 பேரில் 44 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.