மண் பானைகள்!

 


மண் பானை 3 நிறங்களில் இருக்கும்.


1. சிவப்பு - தானியம் / நீர் / தினப்பயன்பாடு

2. கருப்பு - தயிர்

3. வெளிச் சிவப்பு / உள் கருப்பு - கீரை ஆய்ந்து சேகரிக்க

பானைகளில் மொத்தம் 69 வகைகள் உண்டு.

1. அஃகப்பானை - தவசம் (தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம் - தவசம்

2. அஃகுப்பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.

3. அகட்டுப்பானை - நடுவிடம் பருத்த பானை

4. அடிசிற்பானை - சோறு ஆக்குவதற்குப் பயன் பெறும் பானை.

5. அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப் பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப் பெறும் ஏழு பானை வரிசை.

6. அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.

7. உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.

8. உறிப்பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை

9. எஃகுப்பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை

10. எழுத்துப்பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை

11. எழுப்புப்பானை - உயரம் வாய்ந்த பானை

12. ஒறுவாயப்பானை - விளிம்பு சிதைந்த பானை

13. ஓதப்பானை - ஈரப் பானை

14. ஓர்மப்பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை

15. ஓரிப்பானை - தனிப் பானை, ஒல்லியான பானை

16. ஓவியப்பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை

17. கஞ்சிப்பானை - கஞ்சியை வடிப்பதற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை

18. கட்டப்பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை

19. கட்டுப்பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை

20. கதிர்ப்பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை

21. கரகப்பானை - கரவப்பானை - நீர்க்கரகம்

22. கரிப்பானை - கரி பிடித்த பானை

23. கருப்புப்பானை - முழுவதுமாகக் கருநீலம் வாய்ந்த பானை

24. கருப்பு & சிவப்பு பானை - உள்ளே கருப்பு நிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை

25. கலசப்பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்

26. கழுநீர்ப்பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)

27. காடிப்பானை - கழுநீர்ப் பானை

28. காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப்பெறும் பானை

29. குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை

30. குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை எனப்படுகின்றது)

31. கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை

32. கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை

33. கூர்ப் பானை - கூர் முனைப் பானை

34. கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை

35. கோளப்பானை - உருண்டு திரண்ட பானை

36. சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.

37. சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி

38. சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை

39. சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை

40. சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை

41. சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை

42. சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்படும் பானை

43. சில்லுப் பானை - மிகச் சிறிய பானை

44. சின்னப்பானை - சிறிய பானை

45. தவலைப் பானை - சிறிய வகைப் பானை (நீர் சேமிக்க உதவுவது)

46. திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)

47. திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)

48. துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை

49. தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை

50. தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை

51. தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை

52. நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை

53. பச்சைப் பானை - சுடப்பெறாத பானை

54. படரப்பானை - அகற்ற பெரிய பானை

55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி

56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)

57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை

58. மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை

59. மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை

60. மிண்டப் பானை - பெரிய பானை

61. மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை

62. முகந்தெழு பானை - ஏற்றப் பானை

63. முடலைப் பானை - உருண்டையுருவப் பானை

64. முரகுப் பானை - பெரிய பானை (திரண்டு உருண்ட பானை)

65. மொங்கம் பானை - பெரும்பானை (மொங்கான் பானை)

66. மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை

67. வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்

68. வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை

69. வெள்ளாவிப் பானை - சலவைத் தொழிலில் துணிகளை வேகவைக்க உதவும் பானை

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.