இளைஞர்களுக்கு பொன்சேகா வாழ்த்து!!


 “அரசியலமைப்புத் திருத்தம் இலங்கைக்கு எவ்வாறு உதவும் என்று எனக்குத் தெரியவில்லை. அரசியல் கலாசாரத்தில் மாற்றம் தேவை. அரசியலமைப்புத் திருத்தமோ, இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதோ அந்தத் தருணத்தில் இலங்கைக்கு உதவப் போவதில்லை என  நேற்றைய நாடாளுமன்ற உரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தாலும் பயனில்லை என்ற அவர்  வீதியில் இறங்கி போராட்டம் நடத்துபவர்கள் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை விரும்புகின்றனர். போராட்டங்களை நடத்தும் இளைஞர்களுக்கு எங்கள் ஆசீர்வாதமும் ஆதரவும் உண்டு.


எனவே வீதியில் நிற்கும் இந்த இளைஞர்களிடம் போராட்டத்தை கைவிட வேண்டாம் என நான் கூற விரும்புகின்றேன். அவர்களின் வெற்றி கையில் உள்ளது. பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 


    #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.