யாழ். பல்கலைக்கழக மாணவி தற்கொலை!!


 யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டாம்   அரையாண்டு மாணவி  பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் செல்வதாக கூறிவிட்டு வந்த இவர் விடுதி அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு காற்றாடியில் தூக்கினை மாட்டி தற்கொலை செய்துள்ளார். 


ஏனைய மாணவர்கள் இவரைக் காணவில்லை என தேடியபடி விடுதியில் பார்த்தபோதே கதவு தாளிடப்பட்டிருந்தததை அவதானித்துள்ளனர். அதன் பின்னரே மாணவி தற்கொலை செய்துள்ள விபரம் தெரியவந்துள்ளது. 


காதல் விவகாரம் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது எனினும் ஏனைய விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. 


பல்கலைக்கழகம் வரை தமது கற்றலை முன்னெடுக்கும் மாணவர்கள் இவ்வாறான முடிவுகளை எடுப்பது  அவர்களின் மன பலவீனத்தையே காட்டுகின்றது. எந்தப்பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை எமது இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்வது பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் பாரிய கடமையாகும் எனவும்  தற்போதைய காலத்தில் தமிழ் இளையோரிடையே ஏற்பட்டிருக்கும் இந்த மனப்பான்மை ஆரோக்கியமற்ற இளைய சமுதாயத்தை உருவாக்கிவிடும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுட்டுள்ளனர். செய்தியாளர் ராவண்

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.