அஞ்சலோ மெத்தியூஸ் 106* - தினேஷ் சந்திமால் 116

 


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று பங்களாதேஷ் அணி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியது.


அதன்படி தனது முதல் இன்னிங்சிற்காக பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய முஸ்புகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் லிட்டன் தாஸ் 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் கசுன் ராஜித 5 விக்கெட்களை மற்றும் அசித பெர்ணான்டோ 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

இதனை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி சற்று முன்னர் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 424 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் சற்று முன்னர் வரை ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இது அவர் பெற்ற 13 வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.