இலங்கைக்கு உதவ தயாராக இருக்கின்றோம்


 இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.


இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதாரத் தளம் அமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்தார்.

இந்தியாவின் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் தவறான நிர்வாகத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கண்டு மனம் உடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கையில் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவை தாம் மதிப்பதாகவும், கடினமான காலங்களில் இந்தியாவின் ஆதரவானது நல்ல நண்பை வெளிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.