நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு!
அரசமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேறினால் 10 பேருக்கு எம்.பி.பதவி பறிபோகும் நிலை ஏற்படும் என ஆங்கில வார இதழொன்றின் செய்தி ஊடாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, இரட்டை குடியுரிமை உடைய 10 அரசியல்வாதிகள், தற்போதைய நாடாளுமன்றத்தில் எம்.பி. பதவியை வகிக்கின்றனர் என குறித்த ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த சட்டமூலம் நிறைவேறினால் அந்த 10 அரசியல்வாதிகளும் எம்.பி.பதவியை இழக்க நேரிடும் என தெரியவருகின்றது.
21 ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ள ‘இரட்டை குடியுரிமை தடை’ என்ற ஏற்பாட்டை நீக்கிக்கொள்வதற்கு இவர்கள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி 10 பேரில் மலையக அரசியல்வாதி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
எனினும், வீசா இன்றி இந்தியாவுக்கு செல்வதற்கான ஓர் ஏற்பாட்டையே அவர் வைத்துள்ளார் எனவும், அது இரட்டை குடியுரிமை அல்ல எனவும் தெரியவருகின்றது.
எனவே, 21 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேறினாலும் அவரின் பதவிக்கு சிக்கல் ஏற்படாது என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை