மாணவர்களின் பரிதாப நிலை!

கல்வியே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எனும் நிலை மாறி தற்போது வாகனப் போக்குவரத்தும் எரிபொருட்களும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை பெறுவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மாணவர்களின் பரிதாப நிலை;  நாளை என்னவாகுமோ! | Plight Of Sri Lankan Students

அதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் பாடசாலை செல்லும் மாணவர்கள் உயிருக்ல்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது மின்தடையால் மாணவர்கள் சீருடையுடன் எரிபொருளுக்காக காத்திருக்கும் அவலநிலையும் தோன்றியுள்ளது.

இலங்கை மாணவர்களின் பரிதாப நிலை;  நாளை என்னவாகுமோ! | Plight Of Sri Lankan Students

இந்நிலையில் நம் எதிகால சந்ததியின் நிலை என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேவேளை நாட்டில் இடம்பெற்ற இனவழிப்புபோர்க்காலத்தில் கூட மக்கள் இவ்வாறான நெருக்கடிகளை சந்தித்ததில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.