தன்னைத்தானே சுட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி!

கடவத்த - கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமில், உப காவல்துறை பரிசோதகர் ஒருவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவந்த அதிகாரியே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தன்னைத்தானே சுட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி! | The Police Officer Who Shot Himself

இந்நிலையில் 59 வயதான உப காவல்துறை பரிசோதகர், கடுவலை - ஜல்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதன்போது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.