தமிழ் அதிகாரிகள் பலவீனமானவர்களா?


யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகிக்கும் பணியில் படையினரை ஈடுபடுத்தியுள்ள செயற்பாடு ஆரோக்கியமானது அல்ல. 


தமிழ் அதிகாரிகள் சாதாரணமான ஒரு பங்கீட்டு நடைமுறையைக்கூட சீராக செய்ய முடியாதவர்கள் என்ற அவப்பெயரை இது ஏற்படுத்தும். 


பொலிஸாரின் பிரசன்னத்துடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இப்பணியை சீராகச் செய்து முடிக்கலாம். 


அதை விடுத்து படையினரை ஈடுபடுத்தும் செயற்பாடானது அதிகாரிகள் நிர்வாகத் திறன் அற்ற பலவீனமானவர்கள் என்ற பார்வையைக் கொடுத்துவிடும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.