பேருந்து பயண கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பு!

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது.

அண்மையில் போக்குவரத்து அமைச்சருக்கும், பேருந்து தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தது.

இன்று பேருந்து பயண கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பு! | New Bus Fare Notification Today

இதன்போது பேருந்து பயண கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும், ஆகக்குறைந்த கட்டணத்தை 40 ரூபாவினால் உயர்த்தவும் குறித்த கலந்துரையாடலின் போது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்றைய தினத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதுடன், நாளைய தினம் முதல் அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.