பிறந்த மூன்று வங்காளப் புலிக்குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!📸
மூன்று மாதங்களுக்கு முன்னர் பிறந்த மூன்று வங்காளப் புலிக்குட்டிகள் நேற்று (2) முதல் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு சீன மிருகக்காட்சிசாலையில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்ட ரொபின் என்ற வங்காளப் புலிக்கும் பெண் புலிக்குட்டிக்கும் மார்ச் 5 ஆம் திகதி குட்டிகள் பிறந்தன இவை மூவரும் ஆண் குட்டிகளாகும்.
இந்த மூன்று குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை