முன்சன்கிளட்பாக் நகரில் வீற்றிருக்கும் நவசக்தி விநாயகர் பெருமானுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி!📸
நேற்றைய தினம் முன்சன்கிளட்பாக் நகரில் வீற்றிருக்கும் நவசக்தி விநாயகர் பெருமானுக்கு மண்டலாபிஷேக பூர்தியை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு பகல் 1008 சங்காபிஷேகமமும் அதனை தொடர்ந்த சாயங்காலம் இராஐராயேஸ்வரி அம்பாளுக்கும்.அதனை தொடர்ந்து சீதேவி பூதேவி சமேத நாராயணருக்கும் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கும் மங்கள வார்திய இசையுடன் கூடிய திருக்கல்யாண வைபோகமும் விநாயகர் பெருமான் மணவாள கோலத்தில் திருவூஞ்சலில் தரிசனமும் அதனைத் தொடர்ந்து மும்மூர்த்திகளும் வீதியுலா வரும் காட்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றன.
கருத்துகள் இல்லை