ரேஷன் முறையில் எரிபொருள்!!

 


எரிபொருளை பங்கீட்டு (RATION) முறைக்கு வழங்கும் அட்டை ஒன்று எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்  அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


எரிபொருள் விநியோகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


உதாரணமாக ஒரு வாரத்திற்கு 100 லீற்றருக்கான பங்கீட்டு அட்டை கிடைக்கும் நபருக்கு அதில் 60 லீற்றரினை பதிவு செய்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் மற்றும் மீதமுள்ள 40 லீற்றர் எரிபொருளை நாட்டின் வேறு எந்தவொரு எரிபொருள் நிலையத்திலும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.