ராஜபக்க்ஷ குடும்பத்தை புரட்டிப்போடும் அந்த 9 ஆம் திகதி!


இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும் என்றும், ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

9 ஆம் திகதியென்பது, இலங்கையில் மாற்றங்கள் நிகழும் நாளாக மாறியுள்ளது. மே 9 மஹிந்த பதவி விலகினார். ஜுன் 9 பஸில் பதவியை விட்டு பறந்தார். ஜுலை 9 பதவி விலகும் அறிவிப்பை ஜனாதிபதி கோட்டா விடுத்தார்.

அதுமட்டுமல்ல பௌத்த பிக்குகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜனாதிபதி , பௌத்த தேரர்களாலும், வாக்களித்த மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இதுவே இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கின்றது. அந்த பணியை ஊடகங்கள் ஆற்றுகின்றன. ஜனாதிபதி பதவி விலகுவதில் ஊடகங்களின் பங்கும் உள்ளது. நல்ல வேலையை அவை செய்துள்ளன.

அப்படி இருக்கையில் போராட்டக்களத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த அவர், பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே, தாக்குதல் நடத்தியமை கவலைக்குரிய விடயமாகும். மஹிந்த ஆட்சியில் ஊடக அடக்குமுறை தலைவிரித்தாடியதுடன் ஊடகங்கள் அதிக அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போதும் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊடகர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு விழுந்த அடியாகும். இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

நாடாளுமன்றமும் அவசரமாக கூடும். ஊழல் அற்ற ஒருவர், அரச தலைவராக வேண்டும். அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.