கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ⅚ வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் நாட்டில் மேலும் 184 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இந்த தொற்றாளர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 666,764 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் மூன்று கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை 16,586 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை