நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை!


 அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகா நாயக்க தேரரை இன்று (07) சந்தித்து ஆசி பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அதனால்தான் தற்போது சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிப்பதாக ஜனாதிபத மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கு ஆதரவளிக்காத அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல தேரர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.