60 லிட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் இருவர் கைது!

 


வடமராட்சி நெல்லியடி பொலிஸாரினால் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 60 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன்  இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் துன்னாலை முள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நெல்லியடி பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி பொலீஸ்  பரிசோதகர் காஞ்சன விமலவீர தலைமையில்  இடம் பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு  சந்தேக நபர்களும்,  கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் சான்றுப் பொருட்களும்  நாளை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.